News March 26, 2025
ஆதி திராவிடர்கள் புகார் பதிவு செய்ய கட்டணமில்லா எண் வெளியீடு

சிவகங்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர்பான முறையீடுகளை, 18002021989 அல்லது 14566 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்
Similar News
News November 27, 2025
சிவகங்கை: கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன்

சிவகங்கை மாவட்டம், கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு வங்கிக் கல்வி கடன் முகாம் வருகின்ற 28.11.2025 அன்று காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக வளாக வீறு கவியரசர் முடியரசனார் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. உரிய ஆவணங்களுடன் மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன – ஆட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் அமராவதி புதூர், செஞ்சை நாட்டார், சங்கராபுரம் மற்றும் பாதரக்குடி ஆகிய கண்மாய்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.