News January 12, 2025
ஆதிதிராவிடர் & பழங்குடியினர் தொழில் தொடங்க நிதியுதவி

ஆதிதிராவிடர் & பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக முதலமைச்சரின் தொழில் முனைவு திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க மதிப்பீட்டு தொகையில் 35% or ரூ.3.50 லட்சம் மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும். தவறாமல் திரும்ப செலுத்தினால் மேலும் 6 % மானியம் வழங்கப்படும். தாட்கோ இணையதளத்தில் (https://newscheme.tahdco.com) விண்ணப்பிக்கலாம்; விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும். *ஷேர்
Similar News
News December 8, 2025
ராமநாதபுரத்திற்கு கனமழை எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (டிச.08) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இராமநாதபுரம், விருதுநகர்,தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 8, 2025
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை நீட்டிப்பு எச்சரிக்கை

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்றி மற்றும் மன்னார் வளைகுடா காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு டிச-12-ம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வலியுறுத்தப் படுகிறது. தற்போது, இராமநாதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்கிறது.
News December 8, 2025
முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் 2025-2026 கல்வியாண்டில் முதலாம் ஆண்டு தொழிற்கல்வியில் சேர்த்துள்ளவர்கள் கல்வி உதவித்தொகை அதிகளவில் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பித்து பயன்பெறுமாறு மேலும் விபரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலத்தை நேரிலோ (அ) தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


