News May 17, 2024

ஆதிதிராவிடர் பள்ளி மாணவனுக்கு ஆட்சியர் பரிசு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், +2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர்களுக்கான “என் கல்லூரி கனவு நிகழ்ச்சி இன்று (17.05.2024) நடைபெற்றது. இதில் +2 தேர்வில் 563 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற ஈஞ்சம்பாக்கம் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவன் கணேஷ்குமார்-க்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் பாராட்டி கேடயம் வழங்கினார்.

Similar News

News November 9, 2025

காஞ்சிபுரத்தில் இலவச தையல் பயிற்சி!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., சுய தொழில் கனவு கொண்ட பெண்களா..? உங்களுக்கான் ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு அரசு சார்பாக பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். நல்ல வாய்ப்பு, உடனே விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 9, 2025

காஞ்சி: நாய்களை கொன்ற இருவர் கைது

image

தாம்பரம்: பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபா. இவர் வீட்டில் ஆடு, மாடு வளர்த்து வருகிறார். தெரு நாய்களையும் சப்பாடு போட்டு பராமரித்து வருகிறார். இந்நிலையில், இந்த நாய்கள் அக்கம் பக்கத்தினரை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டு நபர், எறும்பு பொடி கலந்த உணவை அந்த நாய்களுக்கு வைத்து கொன்ற ஜெகன்குமார்(33), வினோத்(34) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News November 9, 2025

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்உறவு மையக் கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (நவம்பர் 10) காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்கள் எனவே பொதுமக்கள் தங்களின் குறைகளை கோரிக்கைகளாக அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

error: Content is protected !!