News April 19, 2025
ஆண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்

ஆண் குழந்தைகளின் எதிர்கால தேவைக்காக தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டது பொன்மகன் சேமிப்புத் திட்டம். இதை குறைந்தபட்சம் ₹100 முதலீட்டில் தபால் நிலையங்களில் தொடங்கலாம். இதில் வருடாந்திர வைப்பு தொகை, குறைந்தபட்சமாக ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். தற்போது 9.7% வட்டி வழங்கப்படுகிறது. 15 வருட முதிர்வு காலம் கொண்டது. இதற்கு வருமான வரி சலுகை உண்டு. ஷேர் பண்ணுங்க
Similar News
News November 9, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
கள்ளக்குறிச்சி பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <
News November 8, 2025
கள்ளக்குறிச்சி: கணவரின் உடலை மீட்டு தர மனைவி கோரிக்கை!

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லா.கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் மஸ்கட் நாட்டில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி சாலையில் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில், கணவரின் உடலை மீட்டு தரக் கூறி முருகன் மனைவி வசந்தி நேற்று(நவ.7) டிஆர்ஓ ஜீவா கோரிக்கை மனு வழங்கினார்.


