News January 23, 2025
ஆண்டிபட்டி: லாட்டரி சீட்டு விற்றவர் கைது

ஆண்டிபட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அரசு மருத்துவமனை அருகே நின்றிருந்த கொப்பையம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் (51) என்பவரை விசாரணை செய்தபோது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 24 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1500 பணம் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 21, 2025
முல்லைப் பெரியாறு புதிய உதவி செயற்பொறியாளர் பொறுப்பேற்பு

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு, கண்காணிப்பு பணிகளுக்காக கம்பத்தில் சிறப்பு கோட்ட அலுவலகம் உள்ளது. இங்கு உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்த குமார் தென்காசிக்கு பணி மாறுதலாகி சென்றார். இதையடுத்து அங்கு உதவி பொறியாளராக பணியாற்றிய ராஜகோபால் பதவி உயர்வு பெற்று பெரியாறு அணையில் உதவி செயற்பொறியாளராக பொறுப்பேற்றார்.
News November 21, 2025
தேனி: 10th முடித்தால் உளவுத் துறையில் வேலை உறுதி..!

தேனி மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News November 21, 2025
தேனி மாவட்ட நிர்வாகத்தின் புதிய ஆதார் அப்டேட்

தேனி: ஆதார் நிறுவனமான uidai சார்பில் ஆதார் கியூ.ஆர்., ஸ்கேன் செயலி வெளியிடப்பட்டுள்ளது. அந்த செயலியில் கியூ.ஆர். கோடினை ஸ்கேன் செய்தால் ஆதாரில் உள்ள விபரங்களை காணலாம். இந்த விவரங்கள் பரிசோதித்து பணியாளரின் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளலாம். இதனை தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


