News April 6, 2025
ஆண்டாள், ரெங்கமன்னார் மூன்றாம் நாள் புறப்பாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 3-ஆம் திருநாளான நேற்று இரவு ஆண்டாள் தங்க பரங்கி நாற்காலியிலும், ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
Similar News
News December 4, 2025
ஸ்ரீவி., ஆடுகள் திருட்டு; சென்னை போலீசுக்கு தொடர்பா

ஸ்ரீவி., அருகே கொளுஞ்சிபட்டியில் நவ.,13ல் ராஜகோபால் என்பவரின் 5 ஆடுகள், நத்தம்பட்டி லட்சுமிபுரத்தில் ராமர் என்பவரின் 2 ஆடுகள் திருடு போயின. இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் நிலையூர் பிரசாத் 24, ஸ்ரீவி., முத்து 28, ஆகிய இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவத்தில் மதுரையை சேர்ந்த இருவர், சென்னையில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக பிடிப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
News December 4, 2025
விருதுநகர்: டிகிரி போதும்.. ரூ85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

விருதுநகர் மக்களே மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் இங்கு <
News December 4, 2025
ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் சிவகாசி பகுதியில் உள்ள தனியார் லாரி சர்வீஸில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அங்கு உரிமையாளருடன் லோடு இறக்குவது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்து வந்தார். இதனால் விரக்தியில் இருந்த சசிகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்


