News October 23, 2024
ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று இரவு கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அக்.28 அன்று பூரம் நட்சத்திரத்தன்று நந்தவனத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
Similar News
News October 30, 2025
சிவகாசி அருகே இளம்பெண்ணின் கையை வெட்டிய நபர் கைது

சிவகாசி அருகே ரிசர்வ்லையன் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்-கவிதா (30)தம்பதி. கருத்து வேறுபாட்டால் கவிதாவை விட்டு முத்துக்குமார் பிரிந்து சென்றதால் சேகர்(33) என்பவருடன் கவிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கவிதாவின் நடத்தையில் சந்தேகமடைந்த சேகர் குடித்துவிட்டு கவிதாவை தாக்கினார். இதனால் அவரிடம் பேசுவதை நிறுத்தியதால் கவிதாவை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் கையில் வெட்டினார்.
News October 30, 2025
விருதுநகர் அருகே பெண் சடலம் மீட்பு

நரிக்குடி அருகே சாலை இலுப்பைகுளம் பயணிகள் நிழற்குடைக்குள் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி சடலமாக கிடந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற நரிக்குடி போலீசார் உடலை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்ததாக தெரியவந்த நிலையில், உயிரிழந்த காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 29, 2025
விருதுநகரில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா 30.10.2025 அன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள், எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 ஆகிய உரிமஸ்தலங்களில் மதுபான விற்பனை ஏதும் செய்யக்கூடாது. அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார்.


