News April 7, 2025
ஆண்டாள்,ரெங்கமன்னார் ஐந்தாம் நாள் காலை புறப்பாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 5-ம் திருநாளான இன்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
Similar News
News April 13, 2025
விருதுநகர் : 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட தையல் பணியாளர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 10 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
News April 13, 2025
ரேஷன் பொருட்கள் கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க எண்

பரளச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி, பருப்பு போன்ற பொருட்களை பொது மக்களிடம் குறைந்த விலையில் வாங்கி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுபோன்று ரேஷன் அரிசி, பொருட்கள் கடத்தல் குறித்து, பொதுமக்கள் 1800 599 5950 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
News April 12, 2025
விருதுநகரில் 112 பேர் அதிரடி கைது

விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க பழைய ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த நபர்கள் மீது 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.