News April 8, 2025

ஆண்டாள்,ரெங்கமன்னார் ஆறாம் நாள் காலை புறப்பாடு

image

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 6-ம் திருநாளான இன்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் கோட்டைப்புரம் செட்டியார்கள் வகையறா மண்டபத்திற்கு எழுந்தருளி சென்றனர். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

Similar News

News December 1, 2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரி போன்ற பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் -2013 ன் கீழ் உள்ளக குழு அமைத்திட மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவுறுத்தியுள்ளார். உள்ளக குழு அமைக்கப்படாத இடங்களுக்கு ரூ.50,000- அபராதமாக விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News December 1, 2025

விருதுநகர்: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

image

விருதுநகர் மக்களே, உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <>க்ளிக் <<>>செய்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை தேடுங்கள் என்பதை தேர்ந்தெடுத்து பெயர், எந்த சட்டமன்ற தொகுதியில் கடைசியாக வாக்களத்தீர்கள் போன்ற விவரங்களை சரியாக பூர்த்தி செய்தால் உங்க பழைய VOTER ID கிடைச்சுடும். அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News December 1, 2025

விருதுநகர்: இரு குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய தாய்

image

விருதுநகர் மாவட்டம் சாத்துார் எஸ்.ஆர்.நாயுடு காலனியைச் சேர்ந்தவர் தங்கேஸ்வரி 35. இவர் டூவீலரில் தனது 8, 4 வயதுள்ள இரு குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சாத்துார் ரோட்டில் மீனம்பட்டி அருகே சென்ற போது அடையாளம் தெரியாத நம்பர் ஒட்டி வந்த டூவீலர் மோதியதில் மூன்று பேரும் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!