News April 13, 2024
ஆட்டுக்குட்டியுடன் வாக்கு சேகரித்த பாஜகவினர்

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதி வீரபாண்டி பகுதியில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆடு, மாடு, பால் கேன்களுடன் சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Similar News
News December 6, 2025
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூரில் சமூக நீதி மற்றும் பொதுவாழ்வில் தரம் உயரப்பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் தந்தை பெரியார் விருதுக்குரியவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருது ₹1 லட்சம், தங்கப் பதக்கத்தை உள்ளடக்கியது. 2025-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி தேதி டிச.18 ஆகும். தகுதியுள்ள நபர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என திருப்பூர் கலெக்டர் மனீஷ் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
திருப்பூரில் இலவச Sewing Machine ஆப்ரேட்டர் பயிற்சி!

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Specialized Sewing Machine Operator பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் Sewing Machine செயல்பாடு உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <
News December 6, 2025
திருப்பூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<


