News September 14, 2024
ஆட்சியில் பங்கு: வீடியோவை டெலிட் செய்த திருமாவளவன்

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென பேசிய வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விசிக தலைவர் திருமாவளவன், சிறிது நேரத்தில் அதனை டெலிட் செய்தார். “விசிக அரசியலில் அடியெடுத்து வைத்தபோது 1999-இல் ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என முழங்கினோம். 2016-இல் கூட்டணி ஆட்சி என்ற கருத்தை முன்வைத்தோம். சராசரி நபரை பார்ப்பதுபோல் எங்களைப் பார்க்கக்கூடாது” என வீடியோவில் திருமாவளவன் பேசியிருந்தார்.
Similar News
News October 15, 2025
சென்னையில் பிரபல பிரியாணி கடைக்கு பறந்த உத்தரவு

கொடுங்கையூரில் உள்ள பிரபல ஹைதராபாத் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட நாகராஜன் மற்றும் ராதிகா ஆகியோர் வாந்தி, உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டதாக புகார் அளித்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரி சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டதாக உறுதி செய்ததையடுத்து, சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாகராஜனுக்கு ₹25,000, ராதிகாவுக்கு ₹50,000 என மொத்தம் ₹75,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
News October 15, 2025
சென்னை: உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் இல்லையா?

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
News October 15, 2025
3.15 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தவில்லை : மாநகராட்சி

சென்னையில், முறையாக சொத்து வரி செலுத்தாமல், 3.15 லட்சம் பேர் ஏமாற்றி வருவதாக, மாநகராட்சி நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, நிலுவையில் உள்ள 300 கோடி ரூபாய் வரியை வசூலிக்கும் வகையில், மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி, உத்தரவு போட்டுள்ளதாக மாநகராட்சி வருவாய் அலுவலர் கே.மகேஷ் தெரிவித்தார்.