News September 13, 2024
ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் 4 வட்டங்களில் நான் முதல்வன் உயர்வுக்கு படி திட்ட முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் லட்சுமிபவ்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஊட்டி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 17 ஆம் தேதி நடைபெறவிருந்த முகாம் அன்று மிலாது நபி அரசு விடுமுறை என்பதால் 16ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 8, 2025
நீலகிரி கலெக்டர் முக்கிய தகவல்!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து தொடுவானம் என்ற திட்டத்தின் கீழ், பழங்குடி இளைஞர்களுக்காக சேலத்தில் திறன் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. ஜெர்மன் மொழி கற்றல், ஓட்டுநர் பயிற்சி, துணை சுகாதார படிப்புகள் டிராக்டர் மெக்கானிக் ஆகியவை கற்றுத் தர உள்ளன. பதிவு செய்ய மற்றும் விவரங்களுக்கு 9790574437.
News November 7, 2025
நீலகிரி: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
News November 7, 2025
நீலகிரி: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க!

நீலகிரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!


