News January 22, 2025
ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் 24.01.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து தீர்வு காண, ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News October 16, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் போலீஸ் பட்டியல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்டோபர்-15) இரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீசாரின் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் ஏதேனும் பிரச்சனையில் இருந்தால் உடனே அந்த எண்களை அழைத்து புகார் செய்யலாம். அல்லது 100 டயல் செய்து புகார் அளிக்கலாம்.
News October 15, 2025
திருப்பத்தூர் காவல்துறைசார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்டம் (15அக்) திருப்பத்தூர் மாவட்ட, திருப்பத்தூர் மாவட்ட பொது மக்களுக்கு எச்சரிக்கை பதிவை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் அருகில் செல்ஃபி எடுப்பதை தவிர்க்குமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
News October 15, 2025
திருப்பத்தூர்: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு காவல் துறை சார்பில் இன்று இணையவழியில் விழிப்புணர்வு புகைப்படத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி குழந்தைகளை பாதுகாப்பது நமது அனைவரின் கடமை, தற்போது மழை காலம் என்பதாலும் நீர்நிலைகள் நிரம்பி அபாயம் உள்ளதாலும் சிறுவர்கள் ஏரி குளம் குட்டை கிணறு நீர் நிரம்பிய பகுதிக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று அதில் இருந்தது.