News November 23, 2024
ஆட்சியர் தலைமையில் மலைகிராமத்தில் கிராம சபை கூட்டம்

திருப்பத்தூர் ஒன்றியம் புதூர்நாடு மலைகிராம ஊராட்சியில் நிர்வாக காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம், இன்று காலை 10:30 மணி அளவில் கொண்டாடப்படுவதையொட்டி மலைகிராமத்தில் நடைபெறுகிறது. இந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் கலந்து கொள்ள இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News December 6, 2025
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த முதியவர் பலி!

திருப்பத்தூர்: வாணியம்பாடி ரயில் நிலையம் பிளாட்பாரம் அருகே, இன்று (டிச.6) ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் படிகட்டில் பயணம் செய்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண், ஓடும் ரயிலில் தவறி விழுந்து அடிப்பட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 6, 2025
திருப்பத்தூர்: 16 வயது சிறுமிக்கு திருமணம்.. கணவர் மீது போக்சோ!

திருப்பத்தூர்: ஆலங்காயம் மகளிர் ஊர் புற நல அலுவலர் கலைச்செல்வி என்பவருக்கு ஏலகிரி மலையில் குழந்தை திருமணம் செய்ததாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்த போது, மதனஞ்சேரியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் மிட்டூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை முருகன் ஆலயத்தில் திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
News December 6, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்துப் பணி காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(டிச.%) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.


