News August 15, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆலோசனைக் கூட்டம

image

கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் முன் வைக்கும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.

Similar News

News December 5, 2025

குமரி: நாளை எங்கெல்லாம் மின்தடை?

image

குமரி மாவட்ட துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நாளை (டிச.6) நடக்கிறது. எனவே, காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, மலையடி. பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, விளவங்கோடு, கழுவன் திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதி மற்றும் கிராம பகுதியிலும் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE

News December 4, 2025

குமரி: டிரைவரை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு

image

புதுக்கடைப் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. டிரைவரான இவர் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் முன் விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் தாக்கி அவரது கையில் அணிந்திருந்த ஐந்து பவுன் பிரைஸ் லெட், கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். இது தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 4, 2025

குமரி: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

image

குமரி மக்களே! உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!