News November 23, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் குற்றம் சாட்டிய விவசாயிகள்

image

விழுப்புரத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள் இருவேல்பட்டு வாய்க்காலை தூர் வார வேண்டும், பட்டா மாற்றம் நில அளவைப் பணிகளை செய்து கொடுக்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர், விவசாயிகளுக்கு கிசான் அட்டை வழங்குவதில்லை, கூட்டுறவு வங்கிகள் கடன் தருவதில்லை என குற்றம்சாட்டினர்.

Similar News

News October 17, 2025

விழுப்புரம்: போலி ஆவணம் மூலம் இன்சூரன்ஸ்!

image

திருச்சி, லால்குடியை சேர்ந்தவர் செல்லப்பா. இவரது லாரி கடந்த 2016ம் ஆண்டு விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் விபத்தில் சிக்கியுள்ளது. அந்த லாரிக்கு காப்பீடு செய்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முறையிட்டு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார். அதற்காக, போலி இன்சூரன்ஸ் ரசீது சமர்ப்பித்ததாக புகார் எழ, நிறுவன மேலாளர் அளித்த புகாரின் பேரில் செல்லப்பா மீது விழுப்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News October 17, 2025

விழுப்புரம் மக்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.17) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, M.K.மஹால், வீராட்டிக்குப்பம், தீர்க்க சுமங்கலி திருமண மண்டபம், பிடாரிப்பட்டு, சமூதாய கூடம், வேம்பி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், தென்களவாய், அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகம், சங்கீதமங்கலம், JVS மஹால், திண்டிவனம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

News October 17, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் (அக்-16) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!