News April 29, 2025
ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 30.04.2025 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட முகவரிப் பட்டியலில் உள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
Similar News
News December 3, 2025
மார்த்தாண்டம் சந்தையில் ஒருவர் சடலமாக மீட்பு

நல்லூர் பாறைவிளையைச் சேர்ந்த, திருமணம் ஆகாத காய்கறி வியாபாரி பீட்டர் (35), குடிபழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று டிச.2ம் தேதி இரவு மார்த்தாண்டம் காய்கறி சந்தையில் மரணமடைந்த நிலையில் கிடந்தார். தகவல் பெற்ற மார்த்தாண்டம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 3, 2025
நாகர்கோவிலில் இருந்து கோவாவிற்கு சிறப்பு ரயில்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி நாகர்கோவிலில் இருந்து கோவா மாநிலம் மடகானுக்கு 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 6ம் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதை போன்று மடகாணியில் இருந்து 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை புதன்கிழமை நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இதற்கான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது.
News December 3, 2025
குமரி: SBI வேலை.. தேர்வு இல்லை – APPLY!

குமரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <


