News November 22, 2024
ஆட்சியரை சந்தித்து வாழ்த்துப் பெற்ற மாணவர்கள்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற 65 ஆவது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு தேனி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில், வெற்றிப்பெற்ற அனைவரும் இன்று (22.11.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா-வை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்
Similar News
News October 21, 2025
தேனி: விடுதியில் ஒருவர் மர்ம மரணம்

தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (50). குடும்பத்தை பிரிந்து விடுதியில் தங்கி இருந்த இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. மேலும் இவர் குடிக்கு அடிமையாகி உள்ளார். நேற்று முன் தினம் இரவு விடுதியில் சாப்பிட்டு விட்டு தூங்கிய அவர் நேற்று (அக்.20) காலை மயங்கிய நிலையில் இருந்துள்ளார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை.
News October 21, 2025
தேனி: லஞ்சம் கேட்டால் இதை செய்யுங்க!

மதுரை மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று, பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், தேனி மாவட்ட மக்கள், 04546-255477 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News October 21, 2025
தேனியில் 12 ஆண்டுக்கு பிறகு கைது

தேனி கோடாங்கிபட்டியை சேர்ந்த அழகுராஜா. இவரது மனைவி செல்வலட்சுமி ஆகியோர் 2013.ல் ஏற்பட்ட விபத்தில் பலியாகினர். இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சதீஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் சதீஷ் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். நீதிமன்ற உத்தரவில் தேனி போலீசார் சதீஷை நேற்று (அக்.20) கைது செய்தனர்.