News August 16, 2024
ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை, விருதுநகரில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து முறையாக கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கோரி வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ் தாக்கல் செய்த மனுவில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
விருதுநகர் பெண்களே NOTE பண்ணிக்கோங்க!

விருதுநகர் மாவட்ட பெண்களே! உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு உதவி எண்களை வெளியிட்டுள்ளது. இந்த உதவி எண்களை உங்க மொபைலில் SAVE பண்ணிக்கோங்க. உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பெரிதும் உதவும்…
➟குழந்தைகள் பாதுகாப்பு: 1098
➟பெண்கள் பாதுகாப்பு: 1091/181
➟காவல் ஆம்புலன்ஸ்: 112
➟மூத்த குடிமக்கள் உதவி – 14567
நம்ம விருதுநகர் மாவட்ட பெண்கள் எல்லாரும் இந்த எண்ணை SAVE பண்ண SHARE பண்ணுங்க!
News August 9, 2025
விருதுநகர்: புகைக்கூண்டில் சிக்கி கணவன் உயிரிழப்பு

விருதுநகர், மம்சாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் – ராமலெட்சுமி தம்பதி. பிரபாகரன் மது பழக்கத்தால் வேலைக்கு சரி வர செல்லாமல் இருந்தாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று ராமலெட்சுமி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். கணவன் வீடு பூட்டியிருந்தால் புகைக்கூண்டு வழியாக வீட்டின் உள்ளே நுழைய முயன்றபோது மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுக்குறித்து மம்சாபுரம் போலீசார் விசாரணை.
News August 9, 2025
விருதுநகரில் 450 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15 அன்று விருதுநகர் மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, 100 நாள் வேலை திட்டம், ஜல்ஜீவன் திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.