News November 24, 2024
ஆட்சியரிடம் அளிக்கும் மனுவில் கையெழுத்திட அழைப்பு

சிவகாசி பெரியகுளம் கண்மாய் சாலை தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையை தரம் உயர்த்தி, மின் விளக்குகள் அமைத்திட மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிப்பதற்கான மனு சிவகாசி பன்னீர் தெப்பத்தில் நாளை 24-11-2024 (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்களின் கையொப்பத்திற்காக வைக்கப்படுகிறது. நாளை கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் மனுவில் கையெழுத்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
விருதுநகர்: தகாத உறவு.. போலீஸ் ஏட்டு ‘சஸ்பெண்ட்’

விருதுநகர் மாவட்டம், மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்த இளம்பெண்ணுடன், போலீஸ் ஏட்டு ஜெயபாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அக்., 30 இரவு, 11:30 மணிக்கு மேல், விருதுநகர் அருகே இளம் பெண்ணின் வீட்டில் தனிமையில் இருந்தனர். அப்போது, பெண்ணின் கணவர், உறவினர்கள் ஜெயபாண்டியை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினார். இதையடுத்து ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
News November 21, 2025
சாத்தூர் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பைபாஸ் மேம்பாலத்தில் திருநெல்வேலி நோக்கி சென்று லாரி மீது திருமங்கலத்தில் இருந்து வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.