News January 24, 2025
ஆட்சியரகத்தில் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் விவசாயத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தி எவ்வாறு விவசாயம் செய்வது என ஆலோசனையும், மேலும் விவசாயிகளின் குறைகள் குறித்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஆட்சியர் வழங்கி தகுதியுள்ள மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறபித்தார்.
Similar News
News December 6, 2025
நத்தத்தில் தட்டி தூக்கிய அமைச்சர்!

நத்தம் சட்டமன்றத் தொகுதி பகுதிகளில் பல்வேறு மாற்று கட்சியினர் தங்கள் கட்சிகளை விட்டு விலகி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் R.சக்கரபாணி தலைமையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், ஒன்றிய செயலாளர்கள் சேக்சிக்கந்தர் பாட்சா, பழனிச்சாமி, ரத்தினக்குமார், தொகுதி பார்வையாளர் ரஞ்சன்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
News December 6, 2025
திண்டுக்கல்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 6, 2025
திண்டுக்கல்லில் உடல் துண்டாகி இளைஞர் பலி!

திண்டுக்கல் எரியோடு மரவபட்டியை சேர்ந்த பரமேஸ்வரன் மகன் வினோத்(34) இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைகள் இல்லை, மனைவி 1 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வினோத் மன உளைச்சல் காரணமாக எரியோடு அருகே திண்டுக்கல் நோக்கி வந்த சரக்கு ரயில் முன்பு விழுந்து உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


