News March 26, 2025

ஆடு,மாடு,பூனைக்கு வரும் ஏப்.முதல் கட்டணம் வசூல்

image

ஆடு, மாடு, நாய் ஆகிவை வளர்க்க உரிமை கட்டணம் வசூலிக்க மதுரையில் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் வரும் மதுரை நகரில் ஏப்ரல் முதல் ஆடு, மாடு, நாய், பூனை, குதிரைக்கு புதுப்பிக்கப்பட்ட உரிமம் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளதாக மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா தெரிவித்துள்ளார். *செல்ல பிராணி, கால்நடை வளர்ப்போருக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

Similar News

News April 7, 2025

மதுரை: தகாத உறவினால் தூக்கிட்டு தற்கொலை

image

மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், சீகுபட்டியை சேர்ந்த பால்பாண்டி மனைவி மயிலம்மாள்(43) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. தன்னை விட 10வயது மூத்த பெண்ணிடம் இவர் தொடர்பில் இருந்ததை உறவினர்கள் கண்டித்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த இருவரும், மயிலம்மாள் வீட்டு அருகே இருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஊமச்சிகுளம் போலீசார் விசாரணை.

News April 7, 2025

மதுரையில் இறைச்சிக்  கடை செயல்பட தடை 

image

மகாவீர் ஜெயந்தி தினம் அன்று(ஏப்.10) மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு பகுதிகளில்,ஆடு மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற இதர உயிரினங்கள் உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா அறிவிப்பு. மேலும் விற்பனை கடைகளை திறந்து வைக்கவும் கூடாது எனவும் தடையை மீறி செயல்படுபவர்கள் மீது பொது சுகாதார சட்டம் 1939 ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.

News April 7, 2025

மதுரையில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரியார் சிலை முன்பாக இன்று ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆதி திராவிட துறையின் முறைகேடுகளை கண்டித்தும், முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

error: Content is protected !!