News August 4, 2024

ஆடி அமாவாசை முன்னிட்டு ஒகேனக்கலில் குளிக்க தடை

image

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, நீர் நிலைகளில் குளித்து வருவது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவிலேயே வருகை புரிந்துள்ளனர்.

Similar News

News November 19, 2025

தருமபுரி: ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு!

image

தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு கற்பிக்கப்படுகிறது. இதில் சுகாதார ஆய்வாளர் பயிற்சிக்கு பொது சுகாதார திட்டம் என்ற பாடத்தை எடுக்க தகுதி வாய்ந்த மற்றும் அனுபவமிக்க அல்லது அனுபவம் மற்ற ஆசிரியர் தேவைப்படுவதாக மாவட்ட வேலைவாய்ப்பு திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு 8870075201 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

News November 19, 2025

தருமபுரி: கஞ்சா ஆசாமிகளை போலீசார் வலைவீசி பிடிப்பு!

image

தருமபுரி மாவட்டம், அரூர் சுடுகாடு அருகே நேற்று (நவ.19) போலீ சார் ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார். அவரை போலீசார் துரத்தி பிடித்தனர். பின்னர், விசாரணையில் அவர் அரூரை சேர்ந்த தீப்பொறி (வயது 30) என்பதும், அவர் 500 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை அரூர் போலீசார் கைது செய்தனர்.

News November 19, 2025

தருமபுரியில் முத்தரப்பு கூட்டம் – ஆட்சியர் பங்கேற்பு!

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் இன்று (நவ.19) மாலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் கேழ்வரகு சாகுபடி செய்வது தொடர்பாக முத்தரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்றது. உடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாளர் தணிகாசலம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) ரத்தினம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

error: Content is protected !!