News August 2, 2024

ஆடிப்பெருக்கு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

image

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் நிர்வாகத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் மணிவாசன் மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 6, 2025

திருச்சி: மீன்வளத்துறை ஒப்பந்தப்புள்ளி – ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம், கண்ணூத்து ஓடை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை குத்தகைக்கு விடுவதற்கான மின்னனு ஒப்பந்தப்புள்ளிகள் வரும் நவ.10ம் தேதி காலை 11 மணி அளவில் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகத்தில் வைத்து இணையவழி மூலம் திறக்கப்படும். விருப்பமுள்ளோர் விண்ணப்பங்களை <>tntenders.gov.in <<>>என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 6, 2025

சொகுசு கார் மோதி ஒருவர் பலி – போலீசார் விசாரணை

image

வையம்பட்டி அடுத்த புதுவாடி புதூரைச் சேர்ந்த கருப்பையா அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக திருச்சி To திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது சொகுசு கார் மோதியதில், கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 6, 2025

திருச்சி: கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை

image

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் அந்தந்த பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசுக்கான கல்வி நிதியை மத்திய அரசு கடந்த அக்டோபரில் விடுவித்ததை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் 274 பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 1930 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!