News August 3, 2024

ஆடிப்பெருக்கு – இந்த இடங்களில் குளிக்க தடை

image

ஆடிப்பெருக்கு விழா இன்று ( ஆக.3) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீரங்கம், அம்மா மண்டபங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் படித்துறை இல்லாத பகுதிகளில் பொதுமக்கள் இறங்குவதற்கும், நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படித்துறை இல்லாத 52 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 22, 2025

திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம், மணப்பாறை, அணியாப்பூர் அடுத்த வீரமலைபாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் வரும் 23ஆம் தேதி முதல் டிச.12ஆம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாடவோ, ஆடு மாடு மேய்ச்சலில் ஈடுபடவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

திருச்சி: கார் தலைக்கீழ் கவிழ்ந்து விபத்து

image

சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த வேல்முருகன் தனது நண்பர்களுடன் சபரிமலை சென்றுவிட்டு நேற்று மாலை மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லுப்பட்டி அருகே வந்த கொண்டிருந்தார். அப்போது மழையின் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 22, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமை பணிகளில் சேருவதற்கான போட்டி தேர்வுக்கான ஆயத்த பயிற்சி, தமிழ்நாடு அரசின் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெற விரும்புவோர் தங்களது மாவட்டத்தில் உள்ள மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் படிவங்களை பெற்று, வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!