News June 28, 2024

ஆசிரியர் பணி ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளிகளில் வணிகவியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர், கணிதம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் ஜூலை.5 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.

Similar News

News December 4, 2025

அரியலூர் மாவட்டத்தின் மழையின் அளவு

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று மிதமான மழை பெய்தது. இதனை ஒட்டி அரியலூரில் 6.2 மி.மீ, திருமானூரில் 8.2 மி.மீ, ஜெயங்கொண்டத்தில் 16.4 மி.மீ செந்துறையில் 5.2 மி.மீட்டரும், ஆண்டிமடத்தில் 2.8 மி.மீட்டரும், சித்தமல்லி டேமில் 4 மி.மீட்டரும், குருவாடியில் 13 மிமீட்டரும், தா.பழூரில் 3 மி.மீ மழை பெய்துள்ளது. அதன்படி மாவட்டத்தின் மொத்தமாக 58.8 மில்லிமீட்டர் மழை பதிவாதியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 4, 2025

அரியலூர்: விவசாய நிலங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

image

அரியலூர் வட்டாரத்தில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அஸ்தினாபுரம் பகுதியில் நிலங்களை வேளாண்மை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சம்பா நெல் பயிரை அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின் படி பராமரிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

News December 4, 2025

அரியலூர்: கருத்தடை செய்தால் ஊக்கத்தொகை

image

அரியலூர் மாவட்டத்தில், ஆண் கருத்தடை சிகிச்சை முறை எளிய முறையிலும், தையல்-தழும்பு-வலியின்றி ஒரு சில நிமிடங்களில் மேற்கொள்ளப்படும். இதில் கடந்த 5 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளார்கள். மேலும் அரசின் சார்பில் ஊக்க தொகையாக ரூ.1100/-, ஊக்குவிப்போருக்கு ரூ.200/- அன்றே வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!