News October 24, 2024
ஆசிரியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு முகாம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த முகாம் வாய்ப்பைத் தவறவிட்ட அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.26) நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா கோரிக்கை வைத்துள்ளார்.
Similar News
News December 10, 2025
திருச்சி: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 10, 2025
திருச்சி: ரூ.50,000 பரிசு அறிவிப்பு!

நவல்பட்டு அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்படும் 6-ம் ஆண்டு கபடி போட்டி வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.50,000, ரூ.40,000, ரூ.30,000, ரூ.20,000 என ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கபடி வீரர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
திருச்சி மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவிதொகை திட்டத்தின் கீழ் உதவிதொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://umis.tn.gov.in/ என்ற தளத்தில் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


