News December 6, 2024

ஆசிய விளையாட்டு போட்டி: குமரியை சேர்ந்தவர் வெற்றி!

image

மலேசியாவில் நடைபெற்று வரும் காது கேளாதோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று(டிச.,6) ‘Triple Jump’ பிரிவில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுதன் என்ற மாணவர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நேற்று(டிச.,5) குமரியை சேர்ந்த மாணவி ஹமீஷா பர்வின் தங்கப்பதக்கமும் வெள்ளிப் பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 20, 2025

குமரி: மனைவியை கத்தியால் குத்திய கணவன்

image

மார்த்தாண்டான் துறை மீன்பிடி தொழிலாளி வின்செண்ட்(37). இவரது மனைவி ராஜி. கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் வின்செண்ட் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனைவியின் மார்பில் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் குழித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ராஜி அளித்தபுகாரின் பேரில் போலீசார் வின்செண்டை கைது செய்தனர்.

News December 20, 2025

குமரி: SIR-ல் உங்கள் பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

image

குமரி மாவட்ட வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,53,373 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, வாக்காளர் எண் (அ) மொபைல் எண்ணை பதிவு செய்யவும். அதில், உங்கள் பெயர் வாக்குச்சாவடி விவரம் காட்டப்படும். SHARE பண்ணுங்க.

News December 20, 2025

குமரி: 625 லிட்டர் மண்ணெண்ணைய் பதுக்கல்

image

சாமியார் மடம் அருகே கல்லு விளையில் உள்ள ஒரு தோட்டத்தில் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் திருவட்டாறு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையில் போலீசார் தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 33 கேன்களில் 625 லிட்டர் மண்ணெண்ணை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!