News April 22, 2025

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு எம்ஆர்ஐ ஸ்கேன்

image

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக 42 கோடி 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி நிறுவப்பட உள்ளதாக சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு பூதப்பாண்டியில் அரசு மருத்துவமனையில் இசிஜி கருவி அமைக்க இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

Similar News

News April 25, 2025

பெண் கொலையில் பரபரப்பு தீர்ப்பு

image

திருவனந்தபுரத்தை சேர்ந்த வினிதா(38) என்பவர் கடந்த 2022-ம் ஆண்டில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது 4 பவுன் நகைகள் மாயமானது. இது குறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் நடத்திய தீவிர விசாரனையில் குமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்த ராஜேந்திரன்(49) நகைக்காக கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் நேற்று ராஜேந்திரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி பிரசூர் மோகன் தீர்ப்பளித்தார்.

News April 24, 2025

குமரி: திருவள்ளுவர் சிலை பற்றிய குறிப்புகள்

image

குமரி முனையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் சில குறிப்புகள்; 133 அடி கொண்ட அந்த சிலை அமைக்கும் பணி 1990ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2000 ஜனவரி 1ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த சிலை 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. சிலையின் மொத்த எடை 7000 டன். சிலையின் எடை 2500 டன். பீடத்தின் எடை 1500 டன். பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை 3000 டன் ஆகும். Share It.

News April 24, 2025

குமரியில் 609 குளங்களில் மண் எடுக்க அனுமதி – ஆட்சியர் 

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று (ஏப்.24) விவசாயிகள் கோரிக்கை தின கூட்டத்தில் பேசும்போது;குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 609 குளங்களில் மண் எடுக்க அனுமதி கிடைத்துள்ளது.அந்த குளங்களில் மண் எடுக்க விண்ணப்பித்த விவசாயிகளின் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.6.98% விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது.மேலும் 724 குளங்களில் மண் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

error: Content is protected !!