News April 12, 2024

ஆசனூர்: வாகனத்தை வழிமறித்த யானை

image

 ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு தண்ணீர் தேடி யானைகள் அலைந்து வருகிறது. சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கூட்டம் உணவு தேடி சாலையில் உலா வந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News

News May 7, 2025

ஈரோடு: மனைவியை கொன்று நாடகம் ஆடிய கணவர்

image

பெருந்துறை அருகே விஜயமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் ராஜ்(40). இவர் சம்பவத்தன்று மனைவி ஜானகியை கட்டையால் அடித்து கொன்று விட்டு நாடகம் ஆடினார். இந்த கொலையை விசாரித்த பெருந்துறை போலீசார், பிரேத பரிசோதனை அடிப்படையில் கணேஷ்ராஜ் கட்டையால் அடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இந்த உண்மையை ஒத்துக் கொண்ட கணேஷ் ராஜை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 7, 2025

ஈரோடு: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

image

ஈரோடு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தொடர்பு எண்கள் ஈரோடு- 0424-2268087, ஈரோடு நகரம்-04242269100, பவானி-04256-230200, சத்தியமங்கலம்-04295-222226, பெருந்துறை-04294-222343, கோபி- 04285222027 உங்கள் பகுதியில் உள்ள காவல்துறைக்கு புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

ஈரோடு: ரூ. 6¾ லட்சம் உண்டியல் காணிக்கை

image

ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், மற்றும் காரைவாயக்கால் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. உண்டியல் என்னும் பணி நேற்று 30-4-2025 கோவிலில் நடைபெற்றது. தற்காலிக உண்டியலில் மட்டும் மொத்தமாக 6,82,000 ரூபாய் உண்டியலில் இருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!