News April 3, 2025
ஆங்கில தேர்வில் 348 பேர் ஆப்சென்ட்

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ஆங்கிலப்பாடத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 348 பேர் ஆப்சென்ட் ஆகினர். மாவட்டத்தில் 82 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 28 ல் துவங்கி ஏப்-15 வரை நடக்கிறது.16 ஆயிரத்து 399 மாணவர்கள், தனித் தேர்வர்களாக 249 பேர் என 16 ஆயிரத்து 648 பேர் தேர்வு எழுதுகின்றனர். நேற்று (ஏப்ரல்-02) நடந்த ஆங்கிலப்பாடத்தேர்வில் 348 பேர் பங்கேற்கவில்லை.
Similar News
News April 18, 2025
ராமநாதபுரம்: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RAIL MADDED* என்ற அப்ளிகேஷனை இந்த <
News April 18, 2025
சாலையை கடக்க முயன்றவர் மீது அரசு பஸ் மோதி பலி

பாம்பன் சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). நேற்று மாலை பாம்பன் பகுதியிலிருந்து அரசு பஸ்சில் ராமநாதபுரம் சென்றார். போதையில் பிரச்னை செய்ததால், இவரை வேதாளை பஸ் நிறுத்தத்தில் கண்டக்டர் இறக்கி விட்டார். அங்கு சுற்றித் திரிந்த ஆறுமுகம் நேற்றிரவு (ஏப்-17) சாலையை கடக்க முயன்ற போது அரசு பஸ் மோதி இறந்தார். இது குறித்து மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 17, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஏப்ரல். 17) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.