News August 10, 2024

ஆக.11ல் நாகர்கோவில் நாய் கண்காட்சி

image

கன்னியாகுமரி கென்னல் கிளப் சார்பில் அகில இந்திய அளவில் அனைத்து வகை நாய் கண்காட்சி & சேம்பியன்ஷிப் போட்டி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெறுகிறது. சேம்பியன்ஷிப் போட்டிகளுக்கு செர்பியாவை சேர்ந்த நெனாட் டேவிடோவிக், நடாசா டேவிடோவிக் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை குமரி மாவட்ட கென்னல் கிளப் செய்து வருகின்றது.

Similar News

News November 2, 2025

குமரி: பக்தர்கள் கவனத்திற்கு!

image

நவம்பர் 16 முதல் கார்த்திகை மாதம் தொடங்குகிறது. சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு (Virtual Q) கட்டாயம் ஆக்கபட்டுள்ளது. தரிசன முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளது. சிரமமின்றி தரிசனம் செய்ய இங்கு <>க்ளிக்<<>> செய்து அக்கவுண்ட் உருவாக்கி உங்க விவரங்களை பதிவிட்டு முன்பதிவு பண்ணுங்க. இதில் தரிசன நேரம், வாகன நிறுத்தம், பிரசாதங்கள் என எல்லாமே தெரிஞ்சுக்கலாம். மற்றவர் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News November 2, 2025

குமரி: தனியார் பாரில் அதிரடி சோதனை

image

நித்திரவிளை போலீசாருக்கு நேற்று கல்லு விளையில் உள்ள பார் ஒன்றில் மது விற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக 44 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக முத்துக்குமார், சிமியோன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News November 2, 2025

குமரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!