News April 27, 2025

ஆக்கி போட்டிக்கு அணி தேர்வு

image

மாநில சீனியர் ஆண்கள் சாம்பியன் போட்டி கோவில்பட்டியில் மே 10 முதல் 14 வரை போட்டிகள் நடைபெற உள்ளன. தூத்துக்குடி மாவட்ட அணிகளில் கலந்து விளையாட பெண்கள் அணி வரும் ஏப்.29 அன்று காலை 7 மணி அளவில் கோவில்பட்டி வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் வைத்து மாவட்ட அணி தேர்வு நடைபெற இருக்கிறது. கலந்து கொள்ள விருப்பமுள்ளோர் கீழ்க்கண்ட 9443190781 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 24, 2025

சேவை குறைபாட்டால் பொதுத்துறை வங்கிக்கு அபராதம்

image

விளாத்திகுளத்தை சேர்ந்தவர் நீதிமன்ற ஊழியர் கார்த்திக் ராஜா. இவர் தூத்துக்குடியில் ஒரு பொதுத்துறை வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்ற போது பணம் வந்ததாக ரசீது மட்டும் வந்தது. ஆனால் பணம் வரவில்லை. இது சம்பந்தமாக வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தூத்துக்குடி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் வங்கிக்கு ரூ.30000 அபராதம் விதிக்கப்பட்டது.

News October 24, 2025

உயர்கல்வி சேர்க்கையில் தூத்துக்குடி மாவட்டம் சாதனை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் என் கல்லூரி கனவு உயர்வுக்கு படி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 18130 மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் உயர் கல்வி சேர்க்கையில் 96.15% சாதனை படைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News October 23, 2025

தூத்துக்குடி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இங்கே கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!