News September 27, 2024
அவர் தான் துணிச்சலானவர்: சைஃப் அலி கான்

நேர்மையான, துணிச்சலான அரசியல்வாதி ராகுல் என நடிகர் சைஃப் அலி கான் கூறியுள்ளார். எதிர்மறை விமர்சனங்களை கடின உழைப்பால் சுவாரஸ்யமாக மாற்றியவர் ராகுல் எனக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் எதிர்காலம் அவர்தான் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக டிவி நிகழ்ச்சியில், மோடி, ராகுல், கெஜ்ரிவாலில் துணிச்சலான அரசியல்வாதி யார் என சைஃப்பிடம் கேட்கப்பட்டது. நீங்க யாரை நினைக்கிறீங்க? Cmd Here.
Similar News
News October 23, 2025
நிவாரணம் பற்றி பேச EPS-க்கு அருகதை இல்லை: சேகர்பாபு

மழை நிவாரண பணிகள் குறித்து பேச EPS-க்கு அருகதை இல்லை என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர், ஆளும்கட்சியாக இருந்தபோது கால்கூட தரையில் படாமல்தான் EPS பணியாற்றினார் என விமர்சித்தார். மேலும், கொரோனா காலத்தில் கூட உயிரை துச்சமென நினைத்து களத்தில் பணியாற்றியது அன்றைய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்தான் என்றார்.
News October 23, 2025
மூலிகை: நன்மைகளை வாரி வழங்கும் தீருநீற்றுபச்சிலை!

➤இதன் 4 இலையை கசக்கி முகர்ந்து பார்த்தால் போதும், தலைவலி நீங்கிவிடும். ➤வியர்வை நாற்றம் அடிக்காமல் இருக்க, ஒரு கைப்பிடி பச்சிலை இலைகளைப் பறித்து நீரில் நன்கு ஊற வைத்து, அந்த தண்ணீரில் குளித்தால் உடல் நறுமணமாக இருக்கும். ➤காது வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த இலையின் சாற்றை, சில சொட்டுகள் விட்டால் வலி நீங்கும். ➤வாயுத்தொல்லை இருப்பவர்கள், இந்த இலையை பச்சையாக மென்று தின்றால் பிரச்னை சரியாகும்.
News October 23, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,500-க்கும், சவரன் ₹92,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. USA – சீனா இடையேயான புவிசார் அரசியல் சுமூகமாக மாறியது, முதலீட்டாளர்கள் தங்கம் மூலம் கிடைத்த பங்குகளை விற்று லாபம் ஈட்ட முடிவு செய்தது உள்ளிட்ட காரணங்களே விலை சரிவுக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.