News December 6, 2024
அவசர மருத்துவ உதவியாளருக்கான நேர்முகத் தேர்வு

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாக 108ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் 108ஆம்புலன்சில் காலியாக உள்ள அவசர மருத்துவ உதவியாளருக்கான கடந்த 29ஆம் தேதி வெளியானது. இதற்கு முதற்கட்ட நேர்முகத் தேர்வு இன்றும் நாளையும் (6,7ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை நடைபெற உள்ளது. நேர்முக தேர்வு வருபவர்கள் தங்களது கல்வித்தகுதி, முகவரி, அடையாள சான்றுகளை எடுத்து வர அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 23, 2025
திருச்சி: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள Vehicle Mechanic, MSW(Painter), MSW(Driver Engine Static)542 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, ITI
3. கடைசி தேதி : 24.11.2025
4. சம்பளம்: ரூ.20200 வரை
5. இதற்கு <
இத்தகவலை அனைவருக்கும் SHAREபண்ணி தெரியப்படுத்துங்
News November 23, 2025
திருச்சி: பால்காரர் கத்தியால் குத்தி கொலை

லால்குடி, நாகராஜ் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால்காரர் ஆறுமுகம். இவரது இடத்தை அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பர் தனக்கு விற்க சொல்லி கேட்டு பிரச்னை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று பால் வியாபாரம் முடித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பிய ஆறுமுகத்தை கோவிந்தன் கத்தியால் குத்தியுள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
News November 23, 2025
திருச்சி: சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல் பாறைப்பட்டி குவாரிக்கு ஜல்லி ஏற்றச் சென்ற லாரி புத்தாநத்தம் அடுத்த மெய்யம்பட்டி பிரிவு ரோடு புதுக்குளம் அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த ஓட்டுநர் செல்லப்பன்-ஐ மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


