News April 3, 2025
அவசர உதவி வாட்ஸ் அப் எண் அறிவிப்பு – கலெக்டர் தகவல்

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், இதர சேவைகள் மற்றும் அவசரகால உதவிகள் குறித்து பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க 7790 019008 என்ற செல்போன் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்போன் நம்பரை 24 மணி நேரமும் வாட்ஸ் அப் அல்லது தொலைபேசி வாயிலாக கோரிக்கை மூலம் தகவல் அனுப்பி தீர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 12, 2026
தென்காசி: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! உடனே APPLY

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு <
News March 12, 2026
தென்காசி: OPS அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் மதுரையில் திமுகவில் இணைந்து கொண்ட, தென்காசி மாவட்ட ஒபிஎஸ் அணி நிர்வாகிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து வரவேற்று பேசினார். இதில் மாவட்ட ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News March 12, 2026
தென்காசியில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது.!

தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 11 கிலோ கஞ்சா கடத்தியதாக, விக்னேஷ் (32), இசக்கிக்குமார் (31), பேச்சிமுத்து (30) ஆகியோர் கடந்த பிப்., மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S மாதவன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியர் கமல்கிஷோர் உத்தரவின்படி 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.


