News April 3, 2025
அவசர உதவி வாட்ஸ் அப் எண் அறிவிப்பு – கலெக்டர் தகவல்

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், இதர சேவைகள் மற்றும் அவசரகால உதவிகள் குறித்து பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க 7790 019008 என்ற செல்போன் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்போன் நம்பரை 24 மணி நேரமும் வாட்ஸ் அப் அல்லது தொலைபேசி வாயிலாக கோரிக்கை மூலம் தகவல் அனுப்பி தீர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 15, 2025
தென்காசி: கிணற்றில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம்!

கடையம் அருகே ரவணசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் (32). திருமணமாகாத இவர் கடந்த 10-ம் தேதி திடீரென மாயமானார். எனவே உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில், நேற்று அப்பகுதி கிணற்றில் முத்துக்குமார் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முத்துகுமார் உடலை கைப்பற்றிய போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அவர் இறப்பு தற்கொலையா? கொலையா என விசாரித்து வருகின்றனர்.
News December 15, 2025
தென்காசி: இளைஞர் விபத்தில் பலி

தென்காசி நயினாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த உடையார் என்பவரின் மகன் செல்வா (22). இவர் கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலைய பகுதியில் நடந்த விபத்தில் பலத்த காயமடைந்தார். இவருக்கு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 15, 2025
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று டிச.14 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


