News March 7, 2025
அழுகிய நிலையில் தூக்கில் ஆண் சடலம்

புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட கிள்ளுக்கோட்டை வனதுர்க்கை அம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டில் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் அழுகிய நிலையில் தூக்கில் தொங்குவதை பொதுமக்கள் பார்த்தவுடன் உடையாளிப்பட்டி காவல் துறைக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 19, 2025
கொடும்பாளூர்: அகழாய்வில் கிடைத்த பழமையான பொருட்கள்

புதுக்கோட்டை கொடும்பாளூரில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் 100க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க அணிகலன்கள், 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள், பாசி மணிகள், நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கருங்கல் சுவர் உள்ளிட்டவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
News April 19, 2025
புதுக்கோட்டை: கோடைச்சுற்றுலா குடும்பத்தோடு கிளம்புங்க!

புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் கி.பி 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்தன்னவாசல் அமைந்துள்ளது,இங்குள்ள சமனர் குகைகளில் ஒவியங்கள்,அகழ்வராச்சிகளின்படி புதைக்கப்பட்ட பானைகளும்,மனித எலும்புகூடுகளும் உள்ளது,மலையழகும்,பூங்காக்களும்,சிற்பக்கலை,
ஒவியக்கலைகள் இந்த சித்தன்னவாசல் சுற்றுலாதலத்தில் உள்ளது,உள்ளுரில் கோடை சுற்றுலா செல்லும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News April 19, 2025
புதுக்கோட்டையில் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்

புதுகை மாவட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 21ஆம் தேதி பகல் 12 மணி அளவில் புதுகை தலைமை தபால் நிலையம் அலுவலகம் எதிரே உள்ள “மேனா காம்ப்ளக்ஸில்” நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் சேமிப்பு வங்கிக் கணக்கு, காப்பீடு உள்ளிட்ட தங்களது குறைகளை நேரிலோ அல்லது கடிதம் மூலமோ தெரிவிக்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)