News April 8, 2025

அழகர் கோவில் சித்திரை திருவிழா செய்தி குறிப்பு வெளியீடு

image

மதுரையில் சித்திரரை திருவிழாவை முன்னிட்டு வரும் 27ம் தேதி காலை 6 மணிக்குமேல் 7 மணிக்குள் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் வைத்து சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்த விழா மற்றும் ஆயிரம் பொன் சப்புரம் தலையங்கம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன. தொடர்ந்து மதியம் 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மதுரை,வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்திலும் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறவுள்ளது.

Similar News

News November 1, 2025

மதுரை மாநகராட்சியில் புதிய மினி ரோபோட் தொடக்கம்

image

மதுரை மாநகராட்சிக்குள் உள்ள சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றுவதற்காக மாநகராட்சி சார்பில் புதிய மினி ரோபோட் வாகனம் இன்று (01.11.2025) தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் திருமதி சித்ரா விஜயன், பயன்பாட்டுத் துறை உதவி பொறியாளர் அலிநீத் மற்றும் சாவனா ஸ்பேர் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News November 1, 2025

மூத்த தமிழறிஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் தமிழுக்கும் தமிழ் துறைக்கும் மறுமலர்ச்சிக்கும் தொண்டாற்றிய வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. நடப்பாண்டில் 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இத்திட்டத்தின் கீழ் ரூ.8000 உதவித்தொகை வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. 2025-2026 ஆண்டிற்கான விண்ணப்பங்களை மதுரை ஆட்சியர் அலுவலக தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

News November 1, 2025

மதுரை: கோயிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்..

image

மதுரை மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் எழுத படிக்க தெரிந்த 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!