News September 13, 2024

அறிஞர் அண்ணாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி மரியாதை

image

மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116 – வது பிறந்த நாள் வரும் ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்கள் அறிஞர் அண்ணாவின் சிலை மற்றும் உருவ படத்திற்கு மரியாதை செலுத்துகின்றனர்‌. அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

Similar News

News November 16, 2025

சென்னை தள்ளுவண்டி கடைகளுக்கு இனி கட்டாயம்

image

சென்னை உள்பட தமிழ்நாட்டில் தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களில் இலவசமாக உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும், உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

News November 16, 2025

தவெக சார்பில் இன்று போராட்டம்

image

வாக்காளர் சிறப்பு திருத்த குளறுபடிகளை (SIR) கண்டித்து தவெக சார்பாக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நாளை ஆர்பாட்டம் நடைபெற உள்ள, நிலையில் சென்னை சிவானந்தா சாலையில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் மாவட்ட செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

News November 15, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (15.11.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!