News November 24, 2024
அறிக்கை வெளியிட்டுள்ள சுப.உதயகுமார்

அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“கூடங்குளம் வழக்குகள் திரும்பப் பெறப்படாமல் இருப்பதற்கு சட்டப்பேரவை தலைவர் சில காவல்துறை அதிகாரிகளை காரணம் காட்டுகிறார்; இன்னொரு பக்கம், புதிதாக சம்மன் அனுப்பி கொண்டிருக்கிறார்கள்;அரசுக்குத் தெரியாமல் இவையெல்லாம் நடக்கின்றன என்றால், இது என்ன?; விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்
Similar News
News December 3, 2025
நாகர்கோவிலில் இருந்து கோவாவிற்கு சிறப்பு ரயில்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி நாகர்கோவிலில் இருந்து கோவா மாநிலம் மடகானுக்கு 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 6ம் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதை போன்று மடகாணியில் இருந்து 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை புதன்கிழமை நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இதற்கான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது.
News December 3, 2025
குமரி: SBI வேலை.. தேர்வு இல்லை – APPLY!

குமரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <
News December 3, 2025
குமரி: பெண் மருத்துவரிடம் தகராறு செய்த நபர்

தக்கலை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்த மடிச்சல் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் (40) என்பவரை, மருத்துவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் கைது செய்தனர். நெற்றி காயத்திற்கு சிகிச்சை பெற வந்தபோது அவர் ரகளையில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.


