News January 7, 2025

அறந்தாங்கி அருகே 5 பேர் கைது

image

அறந்தாங்கி சன்னதி வயலில் ஒரு சிலர் சீட்டாட்டம் விளையாடுவதாக அறந்தாங்கி காவல் ஆய்வாளர் சூரிய பிரகாஸ்-க்கு தகவல் கிடைத்தது.  நேற்று மாலை அங்கு சென்ற போலீசார் விநாயகர் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாடிய பன்னீர்செல்வம், ஜான் பாண்டியன், சாதிக் பாஷா, கமலதாஸ், ஷர்புதீன், ஆகியோரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

Similar News

News January 9, 2025

புதுகை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் மும்பாலை கிராமத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்து பேசும்போது ‘பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் நிலவரம் குறித்து கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருவதாக’ மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்.

News January 9, 2025

4,92,891 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு- ஆட்சியர் தகவல்

image

புதுகை மாவட்டத்தில் 4,92,891 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். புதுகை மாவட்டத்தில் 4,91,944 அரிசி அட்டை தாரர்களுக்கும், 947 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட உள்ளதாகவும், இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயனாளிகள் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 8, 2025

பொங்கல் கரும்பை ஆய்வு செய்த ஆட்சியர்

image

தை திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக பொங்கல் தொகுப்பில் கரும்பும் வழங்கப்பட இருப்பதால், அரசர் குளம் பகுதியில் அரசால் வாங்கப்பட்ட செங்கரும்பு தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆட்சியர் அருணா இந்நிகழ்வில் கூட்டுறவுத் துறையின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.