News August 2, 2024
அறந்தாங்கியில் மின்மாற்றியை துவக்கி வைத்த அமைச்சர்

அறந்தாங்கி அடுத்த மறமடக்கி ஊராட்சியில் பொதுமக்களின் மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆற்றங்கரை பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியின் செயல்பாட்டை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மின்சார துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Similar News
News November 25, 2025
புதுகை: இறந்தும் வாழும் இளம்பெண்!

புதுக்கோட்டையை சேர்ந்த முருகேஸ்வரி (23) என்ற இளம்பெண் சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்தார். இந்நிலையில் அவரது கண், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர். இதன் மூலம் 6 பேருக்கு முருகேஸ்வரி மறுவாழ்வு அளித்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது உடலுக்கு இறுதி சடங்கின் போது அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
News November 25, 2025
புதுகை: மழையால் இடிந்து விழுந்த 6 வீடுகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அவ்வகையில், கறம்பகுடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெய்த மழையால் வெள்ளம் சூழந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தை கால்வாய் தண்ணீர் முழுகடித்து, ஊருக்குள் நீர் புகுந்தது. இதில், சக்திவேல் என்பவரின் வீடு முழுமையாக இடிந்து விழுந்தது. மேலும் அதே பகுதியில் 5 வீடுகளின் சுவருகள் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்டன.
News November 25, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


