News October 24, 2024
அரூர் கோட்டாட்சியர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 7000 கன அடி தண்ணீர் இன்று (அக் 24) சிறிது நேரத்தில் திறந்து விடப்படுவதாக தகவல் வரப்பெற்றுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளம் கரைபுரண்டோடும். ஆகவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.எனவே அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 26, 2025
ஒகேனக்கல்: போதையில் குளித்த வட மாநில இளைஞர் பலி

தர்மபுரி: பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மதுபோதையில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிய பிகாா் மாநில இளைஞரின் உடல் இரண்டு நாள்களுக்குப் பிறகு நேற்று(நவ.25) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
News November 26, 2025
தர்மபுரியில் இன்றைய மின் தடைப் பகுதிகள்

தர்மபுரி: காரிமங்கலம் & தொப்பூர் துணை மின் நிலையங்களில் இன்று(நவ.26) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவிலூர், பைசுஅள்ளி, கெரகோடஅள்ளி, சப்பாணிப்பட்டி, குண்டலப்பட்டி, பொம்மஅள்ளி, மாட்லாம்பட்டி, தொப்பூர், உம்மியம்பட்டி, T.கானிகரள்ளி, செட்டிக்கோம்பை, சந்திரநல்லூர் அதன் சுற்றுவட்டாரத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.