News January 1, 2025

அரூரில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

image

அரூர்-தர்மபுரி சாலை வனப்பகுதியையொட்டி உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், சந்தன மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கல்லூரி வளாகத்தில் இருந்த, 2 பழமையான சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து, நேற்று அரூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 26, 2025

தருமபுரி: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

image

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993ல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர்!

News October 26, 2025

தருமபுரி: பல்நோக்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

image

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் திட்டத்திற்கு பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17/11/2025. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இடம் சமூக நல அலுவலகம் பழைய மாவட்ட ஆட்சியரகம்.

News October 26, 2025

தருமபுரி: சிறப்பு கிராம சபை கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

நவம்பர் மாதம் 01ஆம் தேதி சனிக்கிழமை மாவட்டத்தில் உள்ள 249 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதம் செய்ய இருப்பதால் கிராம ஊராட்சியில் உள்ள பொதுமக்கள், சுய உதவி குழுவினர், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம் என தர்மபுரி ஆட்சித் தலைவர் சதீஷ் இன்று அக். 25 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!