News August 25, 2024

அரூரில் கஞ்சா பதுக்கி விற்று மூன்று பேர் கைது

image

அரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் வசந்தா தலைமையில் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு மருத்துவமனை முன்பு சந்தேகப்படும்படி இருந்த சக்திவேல், பரத், விநாயகம் ஆகியோர் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 3.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

Similar News

News February 23, 2026

தருமபுரி ரோந்து பணி காவல‌ர்க‌ள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்.22) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 22, 2026

தருமபுரி: வாடகை வீட்டில் இருக்கீங்களா….

image

தருமபுரி வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

News February 22, 2026

தருமபுரி : பெண் குழந்தைகளுக்கு ₹50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும்.

error: Content is protected !!