News May 17, 2024
அருவி போல் நீர் கொட்டும் அணைப்பிள்ளையார் அணை

போடி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இதனை அடுத்து பங்காரு சாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சி அம்மன் கண்மாய், புதுக்குளம் கண்மாய்களில் நீர்வரத்து ஏற்பட்டது. போடி மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணை அருவி போல் நீர்க்கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News December 4, 2025
தேனியில் இன்று இங்கெல்லாம் மின்தடை

தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை வியாழக்கிழமை (04.12.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர் புரம், சூலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள செய்தியை ஷேர் செய்யுங்க.
News December 4, 2025
கூடலூர்: தாயை தாக்கிய மகன் கைது

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மூக்கம்மாள் (75). இவரது மகனான இளங்கோவனுக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவரது மனைவி கோபித்துக் கொண்டு சென்று விட்டார். இந்நிலையில் இளங்கோவன் கொடுத்த பணத்தினை தனது பேத்தியின் பெயரில் தபால் நிலையத்தில் உள்ள கணக்கில் போட்டுள்ளார். மீண்டும் அந்த பணத்தைக் கேட்டு இளங்கோவன் தனது தாயை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் இளங்கோவனை போலீசார் கைது (டிச.2) செய்தனர்.