News December 6, 2024

அரியலூர்: 1.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

image

ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழங்கியதை தொடர்ந்து ஜெயங்கொண்டம் சுபம் மஹாலில் தலைவர் திரு.பொ. ரத்தினசாமி அவர்களின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தொல் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 10, 2025

அரியலூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை அனைவருக்கும் ஷேர் செய்ங்க.

News December 10, 2025

அரியலூர்: சட்ட விரோத மது விற்பனை-ஒருவர் கைது

image

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் நக்கம்பாடி பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் இருவரும், அரசு மதுபான பாட்டில்களை வீட்டின் பின்புறம், சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் சோதனையில் 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News December 10, 2025

அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விபரம்

image

அரியலூர் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில், குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கும், தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி (டிச.09) இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தில், மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யவும்.

error: Content is protected !!