News April 17, 2025
அரியலூர்: விருது பெற ஆட்சியர் அழைப்பு

சிறப்பாக செயல்படக்கூடிய சமுதாய அமைப்புகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் 2024-2025-ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விருது பெற கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் வரும் 30ஆம் தேதிக்குள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாமென ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
அரியலூர்: தீப்பற்றி எரிந்த பேருந்தின் சக்கரம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள உடையார்பாளையம் ஆலம்பள்ளம் கிராமத்தில், அரியலூர் ஜெயங்கொண்டம் அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்தில், பின்பக்க டயர் எரிந்து சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் உரசியதால் டயர் தீப்பிடித்து எரிந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
News December 16, 2025
அரியலூர்: ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை ரெடி!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 16, 2025
அரியலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.16) மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


