News August 14, 2024
அரியலூர் வாட்ஸ்அப் மூலம் மோசடி

அரியலூர் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை வைத்து முகம் தெரியாத நபர்களிடமிருந்து +94785154768 என்ற எண்ணிலிருந்து வாட்ஸ்அப் கால், வாட்ஸ்அப் மெசேஜை மூலமாக அரசு அதிகாரிகளிடம் தொடர்பு கொள்வதாக கூறப்படுகிறது. இவ்வாறான அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம்.
மேலும் இவ்வாறான அழைப்புகள் வந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கோ, காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
அரியலூர்: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 23, 2025
செந்துறை நூலகத்துக்கு சிறந்த வாசகர் விருது

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் இயங்கி வரும் நூலகத்துக்கு அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா தலைமையில் சிறந்த வாசகர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற செந்துறை வாசகர் வட்ட தலைவர் மதுக்குமாரை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர். இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் கலந்து கொண்டனர்
News November 23, 2025
அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், இன்று (நவ.22) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


